< Back
மாநில செய்திகள்
கயத்தாறு அருகே  100 வாழைமரங்கள் வெட்டி சேதம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கயத்தாறு அருகே 100 வாழைமரங்கள் வெட்டி சேதம்

தினத்தந்தி
|
27 May 2022 9:26 PM IST

கயத்தாறு அருகே 100 வாழைமரங்கள் வெட்டி சேதப்படுத்திய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

கயத்தாறு:

கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் ஊருக்கு தெற்கு பகுதியில் ஆதிநாராயணன் என்பவரது மகன் மாரியப்பன் மோட்டார் பம்ப்செட் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் அவரது உறவினர்கள் மாரியப்பன், அய்யாத்துரை, சங்கர், குருசாமி, ஆகியோர் வாழை பயிரிட்டிருந்தனர். இந்த வாழை தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வாழைமரங்களை வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். அறுவடைக்கு தயாராக இருந்த இந்த வாழை மரங்கள் வெட்டப்பட்டதால், வாழை உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆண்டனி திலீப், ஆறுமுகம், காசிலிங்கம், மாரியப்பன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாழைகளை வெட்டிய மர்மநபர்கள் யார்? காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்