< Back
மாநில செய்திகள்
கவுந்தப்பாடி அருகேபந்தயம் கட்டி சேவல் சண்டை நடத்திய 12 பேர் கைது
ஈரோடு
மாநில செய்திகள்

கவுந்தப்பாடி அருகேபந்தயம் கட்டி சேவல் சண்டை நடத்திய 12 பேர் கைது

தினத்தந்தி
|
17 Jan 2023 10:17 PM GMT

கவுந்தப்பாடி அருகே பந்தயம் கட்டி சேவல் சண்டை நடத்திய 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி அருகே பந்தயம் கட்டி சேவல் சண்டை நடத்திய 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேவல் சண்டை

பொங்கல் பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதில் சேவல்களை துன்புறுத்த கூடாது, போட்டி நடக்கும் இடத்தில் ஒரு கால்நடை டாக்டர் இருக்க வேண்டும், சேவலின் காலில் கத்தியை கட்ட கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

மேலும் சேவல் சண்டையில் நிபந்தனைகள் மீறப்பட்டால் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையையொட்டி கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சேவல் சண்டை நடப்பதாக கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர்.

கவுந்தப்பாடி அருகே உள்ள ஈஞ்சரமேடு அணைக்கார பள்ளம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது சிலர் சேவல் சண்டை நடத்தியதை கண்டனர். அப்போது அவர்கள் சேவல்களை சண்டையிட வைத்து பந்தயம் கட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். உடனே அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

12 பேர் கைது

விசாரணையில், அவர்கள் ஈஞ்சரம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 34), தர்மாபுரியை சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணன் (24), தர்மாபுரியை சேர்ந்த மகாராஜா (26), கொட்டாப்புளி மேடு பகுதியை சேர்ந்த சதாசிவம் (31), சலங்கபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (26), கூத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரேம் (19) மற்றும் 18 வயது வாலிபர் என்பதும், சேவல்களை சண்டையிட வைத்து ஜெயிக்குது, தோக்குது என பந்தயம் கட்டி விளையாடியதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் கவுந்தப்பாடி அருகே உள்ள மின்னவேட்டுவம்பாளையம் பகுதியில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த கோபி (20), பெரியவலசு பகுதியை சேர்ந்த பூபதிராஜா (27), நசியனூர் கண்ணவேலம்பாளையத்தை சேர்ந்த மூர்த்தி (30) ஈஞ்சரம் பகுதியை சேர்ந்த நவீன்குமார் (35), நசியனூர் கண்ணவேலம் பகுதியை சேர்ந்த சந்திரன் (32) ஆகிய 5 பேர் சேவல்களை சண்டையிட வைத்து ஜெயிக்குது, தோக்குது என பந்தயம் கட்டி விளையாடினர். நிபந்தனைமீறி பந்தயம் கட்டி விளையாடியதாக 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்