< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
கடம்பூர் அருகே சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது
|20 Jun 2023 2:00 AM IST
கடம்பூர் அருகே சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனா்
நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கடம்பூர் அருகே உள்ள மோடிகடவு என்ற பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தோட்டத்தில் 2 பேர் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தனர். உடனே அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், 'மோடிகடவு பகுதியை சேர்ந்த மகேந்திரன் (வயது 58), கடம்பூர் சுஜில்கரை பகுதியை சேர்ந்த ரங்கசாமி (60) என்பதும், அவர்கள் 2 பேரும் சாராயம் காய்ச்சி அதன் ஊறலை பதுக்கி வைத்திருந்ததும்,' தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 2 பேரையும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் பிடித்து கடம்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கடம்பூர் போலீசார் கைது செய்ததுடன், அவர்கள் பதுக்கி வைத்திருந்த 20 லிட்டர் சாராய ஊறலையும் பறிமுதல் செய்தனர்.