< Back
மாநில செய்திகள்
கடமலைக்குண்டு அருகே  குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
தேனி
மாநில செய்திகள்

கடமலைக்குண்டு அருகே குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தினத்தந்தி
|
30 Nov 2022 12:15 AM IST

கடமலைக்குண்டு அருகே குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

கடமலைக்குண்டு ஊராட்சியில் கரட்டுப்பட்டி அருகே இலந்தை குளம் அமைந்துள்ளது. தனி நபர்கள் சிலர் 40 ஆண்டுகளுக்கு மேலாக குளத்தை ஆக்கிரமித்து அதில் விவசாயம் செய்து வந்தனர். இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி நீர் தேக்கி வைக்க வேண்டும் என கடமலைக்குண்டு பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகத்தினர் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் இலந்தைகுளத்தை அளவீடு செய்தனர். இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் இலந்தைகுளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடந்தது. முதற்கட்டமாக குளத்தை சுற்றிலும் கரைகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து பணிகள் நடைபெற்று குளத்தில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் என ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்த பணிகளின் போது கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தங்கம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காளியப்பன், செயலர் துரைப்பாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்