< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
கடமலைக்குண்டு அருகே கஞ்சா விற்ற 2 பெண்கள் கைது
|10 Sept 2022 10:20 PM IST
கடமலைக்குண்டு அருகே கஞ்சா விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
கடமலைக்குண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் தாழையூத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தாழையூத்து ஓடை அருகே நின்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த பேச்சியம்மாள் (வயது 56), கல்லுப்பட்டியை சேர்ந்த சூர்யா (45) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.