< Back
மாநில செய்திகள்
ஹைவேவிஸ் அருகேசிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
தேனி
மாநில செய்திகள்

ஹைவேவிஸ் அருகேசிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்

தினத்தந்தி
|
15 Aug 2023 12:15 AM IST

ஹைவேவிஸ் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மேகமலை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இரவங்கலாறு, வென்னியாறு, மகாராசா மெட்டு உள்ளிட்ட 7 மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மகாராசா மெட்டு, வென்னியாறு ஆகிய கிராமங்களில் சிறுத்தை ஒன்று உலா வருகிறது.

அந்த சிறுத்தை வீடுகளில் வளர்க்கப்படும் கோழி, நாய் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சம் அடைந்துள்ளனர். எனவே சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிந்து அதனை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்