< Back
மாநில செய்திகள்
கயத்தாறு அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கயத்தாறு அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
6 July 2023 12:15 AM IST

கயத்தாறு அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி கிராமத்தில் தெற்குத் தெருவில் வசித்து வந்தவர் பாண்டி நாடார் (வயது 70). விவசாயி. இவரது மனைவி இறந்து விட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி குடும்பத்தினருடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவருக்கு சொந்தமான நிலத்தில் கிடைத்த வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார். இந்த நிலையில் அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது அவரை உடனிருந்து கவனிக்க யாரும் இல்லாமல் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அவர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தார். காய்ச்சல் குணமாகாத நிலையில், நேற்று அவர் வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின் பேரில் கயத்தாறு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலீப் அந்த வீட்டுக்கு செனறு, அவரது உடலை கைப்பற்றி நெலலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்