தூத்துக்குடி
கயத்தாறு அருகே மனைவிக்கு அரிவாள் வெட்டு
|கயத்தாறு அருகே மனைவிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தலைமறைவான கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள அய்யனார் ஊத்து கிராமத்தில் அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் அய்யாத்துரை மகன் ராஜ்குமார் (வயது 30). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த துரைப்பாண்டி என்பவரின் மகள் மொட்டச்சி அம்மாள் (27) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் இருவரும் கடந்த 9 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் நேற்று மாலையில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மகன்கள், மகளை மொட்டச்சி அம்மாள் வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜ்குமார் திடீரென்று மொட்டச்சியம்மாளை அரிவாளால் தலையில் வெட்டினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிய வந்தனர். இதை பார்த்த ராஜ்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்தவெள்ளத்தில் கிடந்த மொட்டச்சி அம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்- இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலீப் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராஜகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.