< Back
மாநில செய்திகள்
கயத்தாறு அருகேமனைவி மீது தாக்குதல்:டிரைவருக்கு போலீசார் வலைவீச்சு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கயத்தாறு அருகேமனைவி மீது தாக்குதல்:டிரைவருக்கு போலீசார் வலைவீச்சு

தினத்தந்தி
|
2 Aug 2023 12:15 AM IST

கயத்தாறு அருகே மனைவி மீது தாக்குதல் நடத்திய டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கயத்தாறு:

கயத்தாறு அருகே உசிலாங்குளம் மேலத்தெரு காளிப்பாண்டியன் மகன் கார்த்திக் (வயது 40). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒருமகன், ஒருமகள் உள்ளனர். இந்த நிலையில் தினமும் குடித்துவிட்டு வீட்டில் வந்து மனைவியை அடித்து உடைத்து சித்திரவதை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த கார்த்திக் மனைவியை களைகொத்தி கணையால் அடித்ததில் பலத்த காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார். கார்த்திக் தப்பி ஓடிவிட்டார். அக்கம் பக்கத்தினர் சாமித்தாயை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதிலீப் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள கார்த்திக்கை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்