< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
தேவதானப்பட்டி அருகேநெல் கொள்முதல் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு
|17 Feb 2023 12:15 AM IST
தேவதானப்பட்டி அருகே நெல் கொள்முதல் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலத்தில் நெல் கொள்முதல் மையத்தில் உள்ளது. இந்த நெல் கொள்முதல் மையத்தில் நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மதுரை மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத் துறை சூப்பிரண்டு சினேக பிரியா தலைமையில், மதுரை உட்கோட்ட துணை சூப்பிரண்டு பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தேனி மண்டல மேலாளர் செந்தில்குமார், தேனி தர கட்டுப்பாடு அலுவலர் மருதவாணன், உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது கொள்முதல் செய்யப்படும் நெல் விவரம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் விவசாயிகளிடம் முறையாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா என கேட்டனர். இதையடுத்து நெல் கொள்முதலில் ஏதேனும் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.