< Back
மாநில செய்திகள்
டி.கல்லுப்பட்டி அருகேபெயிண்டர் அடித்து கொலை; வாலிபர் கைது
மதுரை
மாநில செய்திகள்

டி.கல்லுப்பட்டி அருகேபெயிண்டர் அடித்து கொலை; வாலிபர் கைது

தினத்தந்தி
|
16 Oct 2023 6:32 AM IST

பெயிண்டரை அடித்து கொன்ற நண்பர் கைது செய்யப்பட்டார்.

பேரையூர்


தகராறு

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள தேவன் குறிச்சி ஆவுடையாபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்தி மோகன் (வயது 48). அதே ஊரை சேர்ந்தவர் கார்த்திக் கணேஷ் (29) இருவரும் பெயிண்டர் வேலை செய்து வந்தனர். மேலும் இருவரும் ஒன்று சேர்ந்து மது குடித்துவிட்டு போதையில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் பெயிண்டிங் வேலைக்கு திருநகருக்கு சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தனக்கு தரவேண்டிய பணத்தை திருப்பி தராததால் ஆத்திரமடைந்த கார்த்திக் கணேஷ், சக்தி மோகனை முகத்திலும் நெஞ்சிலும் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

கைது

இதில் முகத்தில் பலத்த காயம் அடைந்த சக்தி மோகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் காா்த்திக் கணேஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து தகவல் அறிந்த டி.கல்லுப்பட்டி போலீசார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட சக்தி மோகனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கார்த்திக் கணேசை கைது செய்து விசாாித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்