தேனி
கூடலூர் அருகேகனமழையால் சேதமடைந்த சாலை:சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
|கூடலூர் அருகே கனமழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய பெருமாள் கோவில் புலம் பகுதியில் மானாவாரி நிலங்களில் தட்டைப்பயிறு, மொச்சை, அவரை, கம்பு சோளப்பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளை பொருட்களை டிராக்டர், சரக்குவேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் மார்க்கெட்டிற்கு கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பெருமாள் கோவில் செல்லும் சாலையில் மந்தை வாய்க்கால் பாலம் அருகே மண் அரிப்பு ஏற்பட்டு ஓடை போன்று காட்சி அளித்து வருகிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே மழையினால் சாலையோரங்களில் ஏற்பட்டுள்ள மண் அரிப்புகளை கண்டறிந்து சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.