< Back
மாநில செய்திகள்
கூடலூர் அருகேமதுரை கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு
தேனி
மாநில செய்திகள்

கூடலூர் அருகேமதுரை கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
16 March 2023 6:45 PM GMT

கூடலூர் அருகே மதுரை கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மதுரை மாநகரில் எதிர்வரும் காலங்களின் மக்கள் தொகையினை கணக்கிட்டு, அம்ரூட் திட்டத்தின் கீழ் ரூ.1,296 கோடி மதிப்பீட்டில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி கூடலூர் அருகே லோயர்கேம்ப் வண்ணான் துறை பகுதியில் இருந்து 125 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக லோயர்கேம்ப் பகுதியில் தலைமையிடம் அமைத்து அங்கிருந்து பண்ணைப்பட்டி வரை சுத்திகரிக்கப்படாத குடிநீர் குழாய் வழியாக கொண்டு செல்லப்படும். பின்னர் அங்கு கட்டப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குழாய் வழியாக கொண்டு சென்று மேல்நிலைத் தொட்டிகளில் நிரப்பி வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த திட்டம் தொடர்பான பணிகள் குறித்தும், மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்வது, குடிநீர் வினியோகிக்கும் முறைகள் குறித்தும் மதுரை மாமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதைத்தொடர்ந்து நேற்று மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்து லோயர்கேம்பில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது துணை மேயர் நாகராஜ், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்சீத் சிங் காலோன், பெரியாறு வைகை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் அன்புச்செல்வன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்