< Back
மாநில செய்திகள்
கூடலூர் அருகேதோட்டங்களில் காய்த்து தொங்கும் மாங்காய்கள்
தேனி
மாநில செய்திகள்

கூடலூர் அருகேதோட்டங்களில் காய்த்து தொங்கும் மாங்காய்கள்

தினத்தந்தி
|
25 April 2023 12:15 AM IST

கூடலூர் அருகே தோட்டங்களில் மாங்காய்கள் காயத்து தொங்குகின்றன.

மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தையொட்டிய கூடலூர், காக்கான் ஓடை, தம்மணம்பட்டி, கழுதைமேடு புலம், பெருமாள் கோவில் புலம், பளியன்குடி உள்ளிட்ட பகுதிகளில் மாந்தோப்புகள் அதிக அளவில் உள்ளன. இந்த பகுதிகளில் காசா, கல்லாமை, மல்கோவா, செந்தூரம், சப்போட்டா, இமாமஸ் உள்பட பல்வேறு வகை ரக மாமரங்கள் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மாமரங்களில் பூக்கள் பூத்துக்குலுங்க தொடங்கிவிடும். ஏப்ரல் மாதத்தில் மாங்காய்கள் திறட்சியாக விளைச்சல் அடைந்து மாம்பழங்களாக சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படும். தற்போது இந்தப் பகுதியில் உள்ள மாமரங்களில் மாங்காய்கள் காய்த்து தொங்குகின்றன. ஆனால் குறைந்த அளவிலேயே விளைச்சல் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் நன்கு விளைந்த மாங்காய்களை விவசாயிகள் பறித்து சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். இதில் கல்லாமை ரூ.20-க்கும், சப்போட்டா ரூ.50-க்கும், செந்தூரம் ரூ.40-க்கும், இமாமஸ் ரூ.100-க்கும் விற்கப்படுகிறது. சிறு வியாபாரிகள் மாங்காய்களை இருட்டு அறையில் வைக்கோல் புல் மூலம் பழுக்கவைத்து விற்பனை செய்துவருகின்றனர். இருப்பினும் உள்ளூர் மக்கள் மாங்காய்களை மொத்தமாக வாங்கி வந்து தங்களது வீடுகளில் உள்ள குடுவைகளில் வைத்து கனிந்த பின் ருசிப்பதையே விரும்புகின்றனர். இதனால் மாந்தோப்புகளுக்கு சென்று மாங்காய்களை வாங்க கூடலூர் பகுதி மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்