< Back
மாநில செய்திகள்
கூடலூர் அருகே  மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்
தேனி
மாநில செய்திகள்

கூடலூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்

தினத்தந்தி
|
3 July 2022 6:58 PM IST

கூடலூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்

கூடலூர் அருகே உள்ள பளியன்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 40). கூலித்தொழிலாளி. நேற்று இவர், தனது உறவினர்களான வீரன் (42), பிச்சையம்மாள் (45), 4 வயது சிறுமியுடன் கேரள மாநிலம் குமுளி பகுதியில் இருந்து பளியன்குடிக்கு ஒரே மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மோட்டார்சைக்கிளை ராஜா ஓட்டினார். மற்ற 3 பேரும் பின்னால் அமர்ந்திருந்தனர்.

லோயர்கேம்ப் மின்நிலைய பிரிவு அருகே வந்தபோது கம்பத்தில் இருந்து பத்தினம்திட்டாவிற்கு சென்ற கார், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து 4 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் ராஜா, வீரன், 4 வயது சிறுமி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், பிச்சையம்மாள் மதுரை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த பிரகாஷ் (46) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்