< Back
மாநில செய்திகள்
கடலூர் துறைமுகம் அருகே  கடலில் மூழ்கிய மேலும் ஒரு வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது
கடலூர்
மாநில செய்திகள்

கடலூர் துறைமுகம் அருகே கடலில் மூழ்கிய மேலும் ஒரு வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது

தினத்தந்தி
|
30 Oct 2022 12:15 AM IST

கடலூர் துறைமுகம் அருகே கடலில் மூழ்கிய மேலும் ஒரு வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் அருகே உள்ள சேடப்பாளையம் காமராஜ் காலனியை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் ஜகதல பிரதாப் (வயது 19). இவர் தனது நண்பரான கடலூர் பாதிரிக்குப்பம் மேகநாதன் மகன் ஜெய் கிருஷ்ணன் (24) உள்பட 9 பேருடன் கடலூர் துறைமுகம் அருகே உள்ள சித்திரைப்பேட்டை கடற்கரை பகுதிக்கு குளிக்க சென்றார். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி ஜகதலபிரதாப், ஜெய்கிருஷ்ணன் ஆகியோர் நீரில் மூழ்கி மாயமாகினர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீனவர்கள் மாயமான 2 பேரையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சித்திரைப்பேட்டை கடற்கரை பகுதியில் ஜெய்கிருஷ்ணன் உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து ஜகதல பிரதாப்பை தேடும் பணி நடைபெற்றது. நேற்று காலை கடலூர் துறைமுகம் அருகே உள்ள நஞ்சிலிங்கம்பேட்டை கடற்கரையோரம் அவரது உடல் ஒதுங்கியது. இதுபற்றி அறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் அங்கு சென்று ஜகதலபிரதாப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்