< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
சோழவந்தான் அருகே பேன்சி கடையில் வைத்திருந்த ரூ.9 லட்சம் திருட்டு- பெண்ணுக்கு வலைவீச்சு
|21 Oct 2023 5:58 AM IST
சோழவந்தான் அருகே பேன்சி கடையில் வைத்திருந்த ரூ.9 லட்சம் திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக செல்வி செல்வம் உள்ளார். இவர் கருப்புகோவில் அருகே பேன்சி கடை வைத்துள்ளார். இவர் வங்கியில் இருந்து ரூ.9 லட்சம் எடுத்து வந்து கடையில் துணி பையில் சுற்றி வைத்திருந்தார். இதையறிந்த ஒரு பெண் கடையில் இருந்த ரூ.9 லட்சத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்விசெல்வம் விக்கிரமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செல்விசெல்வம் அசந்த நேரம் பார்த்து தன் கைவரிசையை காட்டிய பெண் யார் என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.