தேனி
சின்னமனூர் அருகேநாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது
|சின்னமனூர் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனந்தப்பன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது எஸ்.அழகாபுரி பிரிவில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் 4 அடி நீள ஒற்றைக் குழல் நாட்டு துப்பாக்கி இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வருசநாடு காந்திகிராமம் பகுதியை சேர்ந்த ஜெயம், அஜித் என்பதும், கூடலூரைச் சேர்ந்த அரசு என்பவரிடம் இருந்து துப்பாக்கி வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் எதற்காக துப்பாக்கி வாங்கி சென்றனர் என்பது குறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அனுமதியின்றி துப்பாக்கியை விற்பனை செய்த அரசுவை தேடி வருகின்றனர்.