< Back
மாநில செய்திகள்
போடி அருகேகஞ்சா விற்ற பெண் கைது
தேனி
மாநில செய்திகள்

போடி அருகேகஞ்சா விற்ற பெண் கைது

தினத்தந்தி
|
7 Jan 2023 12:15 AM IST

போடி அருகே கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

போடி அருகே உள்ள முந்தல் பகுதியில் குரங்கணி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முந்தல் எழுரம்மன் கோவில் அருகே நின்ற ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர். அதில் அவரிடம் 1 கிலோ 250 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணை நடத்தியதில் அவர், அதே பகுதியை சேர்ந்த சந்திரா (வயது 49) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்