< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
போடி அருகே கண்மாயில் மீன்கள் செத்து மிதந்தன
|20 Sept 2023 12:15 AM IST
போடி அருகே கண்மாயில் மீன்கள் செத்து மிதந்தன.
போடி அருகே மீனாட்சிபுரம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் மீன்வளத்துறை மற்றும் குத்தகைதாரர் சார்பில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை கண்மாய் வழியாக பொதுமக்கள் சென்றனர். அப்போது கண்மாயில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அதிகாரிகள் அங்கு வந்தனர். பின்னர் கண்மாயில் மிதந்த மீன்களை அகற்றினர். மீன்கள் எப்படி இறந்தது என்பது தெரியவில்லை. யாரேனும் விஷம் வைத்து கொன்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.