< Back
மாநில செய்திகள்
போடி அருகேபெண்ணுக்கு வரதட்சணை கொடுமை :ராணுவ வீரா் மீது வழக்கு
தேனி
மாநில செய்திகள்

போடி அருகேபெண்ணுக்கு வரதட்சணை கொடுமை :ராணுவ வீரா் மீது வழக்கு

தினத்தந்தி
|
21 March 2023 12:15 AM IST

போடி அருகே பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய ராணுவ வீரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

போடி அருகே உள்ள குச்சனூர் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துவிஜி (வயது 26). இவர் போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், எனக்கும், குச்சனூர் பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான பாலமுருகன் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 5 வருடங்களாக பாலமுருகன் குடும்பத்தை சரி வர கவனிக்காமல் பணத்தை செலவழித்து வந்தார்.

இதை தட்டி கேட்டதால் பாலமுருகனும், அவரது தாய் வேலம்மாளும் சேர்ந்து கொடுமைப்படுத்தினர். மேலும் எனக்கு சீதனமாக கொடுத்த 45 பவுன் நகையையும் பறித்து கொண்டனர். எனவே அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் பாலமுருகன், அவரது தாய் வேலம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்