< Back
மாநில செய்திகள்
போடி அருகேதிடீரென பழுதாகி நின்ற அரசு பஸ்:பயணிகள் அவதி
தேனி
மாநில செய்திகள்

போடி அருகேதிடீரென பழுதாகி நின்ற அரசு பஸ்:பயணிகள் அவதி

தினத்தந்தி
|
7 Oct 2023 12:15 AM IST

போடி அருகே திடீரென பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதியடைந்தனர்.

போடியில் இருந்து தேவாரம் நோக்கி நேற்று காலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சுமார் 40 பேர் பயணம் செய்தனர். சில்லமரத்துப்பட்டி அருகே பஸ் சென்றது. அப்போது திடீரென பஸ் பழுதாகி சாலையில் நின்றது. பின்னர் பயணிகள் அனைவரும் கீழே இறங்கி பஸ்சை தள்ளி சாலையோரமாக நிறுத்தினர்.

வெகுநேரமாக அவர்கள் காத்்திருந்தனர். ஆனால் பஸ்சில் பழுது சீரமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். பின்னர் மாற்று பஸ்சில் அவர்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். போடி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதனால் நல்ல நிலையில் உள்ள பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்