< Back
மாநில செய்திகள்
போடி அருகேடிரைவரை கத்தியால் குத்திய 4 பேர் கைது
தேனி
மாநில செய்திகள்

போடி அருகேடிரைவரை கத்தியால் குத்திய 4 பேர் கைது

தினத்தந்தி
|
10 Oct 2023 12:15 AM IST

போடி அருகே டிரைவரை கத்தியால் குத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து கோனப்பன் (வயது 22). சரக்கு வாகன டிரைவர். கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது இவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துகோனப்பன் அந்த பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினர். இதையடுத்து முத்துகோனப்பனை கத்தியால் குத்தியவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் முத்து கோனப்பனை குத்தியதாக மேலசொக்கநாதபுரம் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஸ்டாலின், மணி, சுபாஷ், ஜனா ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் மாரிச்சாமி, சிவா, ஆகாஷ், அபி, பிரசாந்த், அர்ஜூன் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்