< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
போடி அருகே கடமானை வேட்டையாடிய 2 பேர் கைது
|2 July 2022 11:14 PM IST
போடி அருகே கடமானை வேட்டையாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்
போடி வடக்கு பகுதியில் உள்ள உலகுருடி சாலையில் போடி வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 மோட்டார்சைக்கிள்களில் 4 பேர் வந்தனர். பின்னர் மோட்டார்சைக்கிள்களை அதிகாரிகள் மறித்தனர். அப்போது 2 பேர் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் போடி மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்த சூர்யபிரகாசு (வயது 23), குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (39) என்பது தெரியவந்தது.
மேலும் மோட்டார்சைக்கிளை சோதனை செய்தபோது கடமானை வேட்டையாடி அதன் இறைச்சியை கொண்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் 2 பேரையும் கைது செய்தனர். கடமான் இறைச்சி, வேட்டையாட பயன்படுத்திய 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.