< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
பவானி அருகே மாணவியிடம் ஆபாசமாக பேசிய தொழிலாளி கைது
|25 Aug 2023 2:51 AM IST
பவானி அருகே மாணவியிடம் ஆபாசமாக பேசிய தொழிலாளியை போலீசாா் கைது செய்தனா்.
பவானி
பவானி அடுத்த ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்தவர் சித்தன் (வயது 50). தொழிலாளி. இவர் அதே பகுதியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளார். மேலும் அவரை உல்லாசமாக இருக்கவும் அழைத்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறினார். மாணவியின் பெற்றோர் ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
உடனே குழந்தைகள் நல அதிகாரிகள் ஆப்பக்கூடல் பகுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பா ஆகியோர் சித்தன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.