< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
பவானி அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்
|2 Jun 2023 2:50 AM IST
பவானி அருகே மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது
பவானியில் பழைய பஸ் நிலையம் அருகே பவானி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையின்போது அந்த லாரியில் 3 யூனிட் செம்மண் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து லாரியை ஓட்டி வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர் தளவாய்ப்பேட்டையை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 40) என்பதும், மண்ணை கடத்தி வந்ததும்,' தெரியவந்தது. இதையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்ததுடன், இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.