< Back
மாநில செய்திகள்
பவானிசாகர் அருகே இடியும் நிலையில் அரசு பள்ளிக்கூட கட்டிடம்
ஈரோடு
மாநில செய்திகள்

பவானிசாகர் அருகே இடியும் நிலையில் அரசு பள்ளிக்கூட கட்டிடம்

தினத்தந்தி
|
13 March 2023 3:06 AM IST

பவானிசாகர் அருகே இடியும் நிலையில் அரசு பள்ளிக்கூட கட்டிடம் உள்ளது.

பவானிசாகர்

சத்தியமங்கலத்தில் இருந்து பவானிசாகர் செல்லும் வழியில் திருமூர்த்தி நகர் உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூடம் சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. மாணவ- மாணவிகள் பற்றாக்குறை காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளிக்கூடம் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்னர் அந்த கட்டிடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் அந்த பள்ளிக்கட்டிடம் பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'பல்வேறு அரசு அலுவலகங்கள் வாடகை கொடுத்து தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே பராமரிப்பின்றி உள்ள இந்த அரசு பள்ளிக்கூடத்தை சீரமைத்து வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்