< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
பவானிசாகர் அருகே மாநில கபடி போட்டி
|25 Aug 2023 3:09 AM IST
பவானிசாகர் அருகே மாநில கபடி போட்டி நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே உள்ளது ஏரங்காட்டூர். இங்கு மாநில அளவிலான கபடி போட்டி நாளை (சனிக்கிழமை) தொடங்கி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை 2 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தபோட்டியில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிக்கு பரிசும், சுழற்கோப்பையும் வழங்கப்படுகிறது.