< Back
மாநில செய்திகள்
பவானி அருகே  தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
ஈரோடு
மாநில செய்திகள்

பவானி அருகே தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

தினத்தந்தி
|
27 Oct 2022 4:25 AM IST

பவானி அருகே குச்சிப்பை தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன.

பவானி

பவானி அருகே குச்சிப்பை தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன.

குச்சிப்பை தொழிற்சாலை

பவானியை அடுத்த குருப்பநாயக்கன் பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட என்.ஜி.ஜி.ஓ. காலனியின் 4-வது வீதியில் சுரேந்தர் கோகுல் என்பவர்களுக்கு சொந்தமான குச்சிப்பை பிரிண்டிங் ெதாழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

சம்பவத்தன்று இரவு 9 மணி அளவில் அந்தப் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து அதிக அளவு மின்சாரம் வந்ததால், மின்கம்பத்தில் இருந்து குச்சிப்பை பிரிண்டிங் தொழிற்சாலை குடோனுக்கு செல்லும் மின் ஒயரில் திடீரென தீப்பற்றியது.

சில நொடிகளில் குடோனில் பிரிண்டிங் செய்ய அடுக்கி வைக்கப்பட்டு இருந்த குச்சிப்பை ரோல்களில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

மோட்டார்சைக்கிள்கள் நாசம்

இதுபற்றி உடனே பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தார்கள்.

எனினும் குடோனில் வைத்திருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பைகள், பிரிண்டிங், எந்திரங்கள், பொருட்கள் மற்றும் குடோனுக்குள் நிறுத்தி வைத்திருந்த 2 மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசம் ஆகின.

இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்