< Back
மாநில செய்திகள்
பவானிசாகர் அருகே   மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா
ஈரோடு
மாநில செய்திகள்

பவானிசாகர் அருகே மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா

தினத்தந்தி
|
8 Jun 2022 5:30 PM GMT

மாகாளியம்மன் கோவில்

பவானிசாகர் அருகே தொட்டம்பாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவிலில் கம்பம் நடப்பட்டு தினமும் இரவில் கம்பத்தை சுற்றி பக்தர்கள் புனிதநீர் ஊற்றினர்.

நேற்றுமுன்தினம் இரவு மாகாளியம்மன் கோவில் முன்பு 36 அடி நீளத்துக்கு குண்டம் அமைக்கப்பட்டது. நேற்று காலை பவானி ஆற்றில் இருந்து அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் மாகாளியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன்பின்னர் மேளதாளம் முழங்க கோவில் பூசாரிகள் அருள் வந்து ஆக்ரோஷத்துடன் ஆடினர். தொடர்ந்து 36 அடி நீள குண்டத்துக்கு பூஜைகள் செய்து பூசாரிகள் பழனிச்சாமி, சதீஷ் தீ மிதித்தனர். பின்னர் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்து மாகாளி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதியம் மாகாளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நேற்று இரவு மாகாளியம்மன் கோவில் கம்பம் பிடுங்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி பவானி ஆற்றில் விடப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்