< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
அத்தாணி அருகே லாரி கவிழ்ந்து விபத்துடிரைவர் உயிர் தப்பினார்
|26 Jan 2023 1:56 AM IST
டிரைவர் உயிர் தப்பினார்
ஆப்பக்கூடலில் இருந்து சத்தியமங்கலத்துக்கு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை குமார் என்பவர் ஓட்டினார். அத்தாணியை அடுத்த ஓடைமேடு பாலம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக லாரி ரோட்டின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டிரைவர் குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று டிரைவர் குமாரை மீட்டு சிகிச்சைக்காக அத்தாணியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.