< Back
மாநில செய்திகள்
ஆப்பக்கூடல் அருகே  சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்;  தம்பதி உயிர் தப்பினர்
ஈரோடு
மாநில செய்திகள்

ஆப்பக்கூடல் அருகே சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்; தம்பதி உயிர் தப்பினர்

தினத்தந்தி
|
2 Sept 2022 3:19 AM IST

ஆப்பக்கூடல் அருகே சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கார் கவிழ்ந்தது. இதில் தம்பதி உயிர் தப்பினர்.

அந்தியூர்

அந்தியூர் அருகே உள்ள அத்தாணியில் இருந்து ஆப்பக்கூடல் நோக்கி நேற்று முன்தினம் மாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. கூத்தம்பூண்டி பிரிவு பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஆப்பக்கூடல் ஏரி வளைவில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த ஈரோட்டை சேர்ந்த கணவன், மனைவி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்