< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகேமண் அள்ளிய பொக்லைன் எந்திரம், லாரி பறிமுதல்:5 பேர் மீது வழக்கு
|19 April 2023 12:15 AM IST
ஆண்டிப்பட்டி அருேக அனுமதியின்றி மண் அள்ளிய பொக்லைன் எந்திரம், லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆண்டிப்பட்டி அருகே எஸ்.கதிர்நரசிங்கபுரம் கிராமத்தில் ஓடை பகுதியில் தனியார் நிலத்தில் அரசு அனுமதியின்றி சிலர் மண் அள்ளுவதாக ராஜதானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எஸ்.கதிர்நரசிங்கபுரம் ஓடை அருகே பொக்லைன் எந்திரம், டிப்பா் லாரி ஒன்று வந்தது. அதன் டிரைவர்கள் போலீசார் வருவதை கண்டதும் வாகனங்களை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து பொக்லைன் எந்திரம், டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் அனுமதியின்றி மண் அள்ளியதாக பொக்லைன் எந்திர டிரைவரான ஆனந்த், அதன் உரிமையாளர் இமயவர்மன், துரைப்பாண்டி, செல்வம் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.