< Back
மாநில செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகேபேச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
தேனி
மாநில செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகேபேச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
5 March 2023 6:45 PM GMT

ஆண்டிப்பட்டி அருகே பேச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

ஆண்டிப்பட்டி அருகே முத்துகிருஷ்ணாபுரம் சாலையில் பேச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம் தொடங்கி இரண்டு நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்தது. இதில் சகல தேவாதி ஹோமங்கள், கலச ஸ்தாபனம், எந்திர பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாத்தப்பட்டு, மகா பூர்ணாகுதி மற்றும் அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

இதையடுத்து நேற்று காலை பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள், யாக சாலையில் இருந்து புறப்பாடாகி, விமான கலசத்தில் ஊற்றப்பட்டது. பின்னர் கோவில் முன்பு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமிட்டன. இதனால் பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு பால், பழம், தயிர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகம் நடைபெற்று. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்