< Back
மாநில செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே  3-வது மனைவிக்கு கொலை மிரட்டல்
தேனி
மாநில செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே 3-வது மனைவிக்கு கொலை மிரட்டல்

தினத்தந்தி
|
17 July 2022 9:57 PM IST

ஆண்டிப்பட்டி அருகே 3-வது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்

ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரணன் (வயது40). கூலித்தொழிலாளி. கடந்த 2001-ம் ஆண்டு இவருக்கும், பூசணாம்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அவர் இறந்து விட்டார். இதையடுத்து வீரணன் 2-வதாக சிறப்பாறை கிராமத்தை சேர்ந்த தேவி என்பவரை திருமணம் செய்தார். அவரும் இறந்து விட்டார்.

பின்னர் கடந்த 2009-ம் ஆண்டு வசந்தி என்பவரை 3-வதாக வீரணன் திருமணம் செய்தார். இந்நிலையில் 4-வதாக வசந்தியின் தங்கை சாந்தியையும் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து 2 பேருடன் சேர்ந்து வீரணன் வாழ்ந்து வந்தார். இதற்கிடையே வசந்தியை திருமணம் செய்து கொடுத்தபோது அவரது பெற்றோர் 5 பவுன் நகை, ரூ.1 லட்சம் வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீரணன் தோட்டம் வாங்குவதற்காக வசந்தியிடம் நகைகளை வாங்கியதாக தெரிகிறது. இந்த நகைகளை வசந்தி திருப்பி கேட்டார். அப்போது கணவர் வீரணன், மாமியார் கொழுந்தம்மாள் ஆகியோர் வசந்தியை துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வசந்தி ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வீரணனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்