< Back
மாநில செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே  விவசாயி வீட்டில் 17 பவுன் நகை திருட்டு
தேனி
மாநில செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே விவசாயி வீட்டில் 17 பவுன் நகை திருட்டு

தினத்தந்தி
|
14 Jun 2022 11:09 PM IST

ஆண்டிப்பட்டி அருகே விவசாயி வீட்டில் 17 பவுன் நகையை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்

ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 85). விவசாயி. இவரது வீட்டிற்கு கடந்த 11-ந்தேதி ரெங்கசமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்த ராஜீ (45) என்பவர் வந்தார். அப்போது அவரை வீட்டில் இருக்க சொல்லி விட்டு கிருஷ்ணசாமி தோட்டத்திற்கு சென்றார். பின்னர் தோட்டத்தில் இருந்து வந்த போது ராஜூவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த 17 பவுன் நகை திருடுபோய் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜூ நகையை திருடியது தெரியவந்தது

மேலும் செய்திகள்