ஈரோடு
அம்மாபேட்டை அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்; அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
|அம்மாபேட்டை அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அப்போது அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அப்போது அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பு வீடுகள்
அம்மாபேட்டை அடுத்துள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் பகுதியில் சாலையோரமாக 14 குடும்பத்தினர் சுமார் 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட இடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என்று கூறி வீடுகளை இடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் கோர்ட்டில் உத்தரவு பெற்றனர். இதையடுத்து ெநடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் சதாசிவம் மற்றும் பணியாளர்கள் பொக்லைன் எந்திரத்துடன் வீடுகளை இடிக்க நேற்று சுந்தராம்பாளையத்துக்கு சென்றனர்.
வாக்குவாதம்
அப்போது சம்பந்தப்பட்ட வீடுகளில் குடியிருந்தவர்கள் ஒன்று திரண்டு வீடுகளை இடிக்க கூடாது என்று அதிகாரிகளை முற்றுைகயிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி, அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். அதன்பின்னர் வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.