< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
|23 Jan 2023 12:30 AM IST
பழனியில் என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடந்தது.
தமிழ்நாடு 14-வது பட்டாலியனில் உள்ள தேசிய மாணவர் படை (என்.சி.சி.) மாணவர்களுக்கான பயிற்சி முகாம் பழனியாண்டவர் கலை-பண்பாட்டு கல்லூரியில் கடந்த 18-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 550 பேர் பங்கேற்றுள்ளனர். முகாமில் பட்டாலியன் ராணுவ அலுவலர் கர்னல் சந்திப்மேனன் தலைமையில் துப்பாக்கி சுடுதல், தகவல் பரிமாற்றம், வரைபடம் கையாளுதல், தலைமை பண்பு, சமூகசேவை செயல்முறை ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது துப்பாக்கியை பிடித்து சுடும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.