< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
என்.சி.சி. அலுவலகம் திறப்பு விழா
|6 Oct 2023 1:59 AM IST
மூலைக்கரைப்பட்டி அரசு பள்ளியில் என்.சி.சி. அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. அலுவலகம் திறப்பு விழா நடந்தது. 5-வது அணி தமிழ்நாடு பட்டாலியன் ஆபீசர் லெப்டினன்ட் கர்னல் நிதிஷ்குமார் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
விழாவில் நாயக் சுபேதார் ராவ், முத்தையா, மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் கு.பார்வதிமோகன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் விஜயராணி, ஓவியர் செல்வகுமார், மஜீத் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
புதிய அலுவலகத்திற்கான நிதி மற்றும் பொருள் உதவிகள் வழங்கிய ஊர் பிரமுகர்கள் ராமலிங்கம், சோமசுந்தரம், சாகுல் ஹமீது, கந்தையா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பி.குமார் ஆகியோருக்கு பள்ளியின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் லதாராணி, உதவி தலைமை ஆசிரியர் அழகுலிங்கம் செய்து இருந்தனர்.