< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
நாசரேத் பிரகாசபுரம்பரலோக மாதா ஆலய தேர்பவனி
|17 Aug 2023 12:15 AM IST
நாசரேத் பிரகாசபுரம் பரலோக மாதா ஆலய தேர்பவனி நடந்தது.
நாசரேத்:
நாசரேத் பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய திருவிழா கடந்த 6-ந்தேதி மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் ஜெபமாலையும், திருப்பலியும், மாலையில் ஜெபமாலை, மறையுறை, நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. நேற்று முன்தினம் புது நன்மை பெறுவோர் மற்றும் இறைமக்கள் சிறப்பு செய்தனர். அதிகாலை 3 மணிக்கு தேரடி திருப்பலி நடைபெற்றது. காலை 8 மணிக்கு திரு விழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி செய்துங்கநல்லூர் பங்குத்தந்தை ஜாக்சன், திசையன்விளை பங்குத்தந்தை டக்லஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. வள்ளியூர் அருட்பணி இசிதோர் மறையுறை ஆற்றினார். காலை 11 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை நற்கருணைப்பவனி நடைபெற்றது.