< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பொம்மை வண்டியில் சிறுவர்களின் விநாயகர் ஊர்வலம்... பங்கேற்று வாழ்த்திய நயினார் நாகேந்திரன்
|4 Sept 2022 7:36 PM IST
நெல்லையில் பொம்மை வண்டியில் சிறுவர்கள் நடத்திய விநாயகர் ஊர்வலத்தில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கலந்துக்கொண்டார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் குறிச்சிகுளத்தில், சிறுவர்கள் விளையாட்டாக பொம்மை வண்டியில் நடத்திய விநாயகர் ஊர்வலத்தில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கலந்துக்கொண்டார்.
குறிச்சிக்குளம் பகுதியில், சிறுவர்கள் சிலர் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரை பிரதிஷ்டை செய்து, இன்று சிறிய பொம்மை வண்டியில் ஊர்வலம் போல எடுத்து சென்றனர்.
அப்போது, அந்த வழியாக சென்ற பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் சிறுவர்களுடன் நடந்து சென்றார். மேலும், விநாயகரை வழிபட்டு, சிறுவர்களின் உண்டியலில் காணிக்கையும் செலுத்தினார்.