< Back
மாநில செய்திகள்
குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலில் நவராத்திரி உற்சவம்
கரூர்
மாநில செய்திகள்

குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலில் நவராத்திரி உற்சவம்

தினத்தந்தி
|
7 Oct 2022 12:42 AM IST

குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலில் நவராத்திரி உற்சவம் நடந்தது.

குளித்தலையில் உள்ள பிரசித்தி பெற்ற கடம்பவனேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் கடந்த 5-ந் தேதி வரை 10 நாட்கள் நவராத்திரி உற்சவம் நடந்தது. இதையொட்டி நவராத்திரி உற்சவத்தின் முதல் நாள் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அம்பாள் நவராத்திரி கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து தினம் தோறும் அம்பாளுக்கு உபசார பூஜைகள் நடைபெற்றன. நவராத்திரி உற்சவத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு சந்திரசேகர சுவாமிகள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. குளித்தலை சுங்க வாயிலில் நடந்த நிகழ்ச்சியில் அசுரனை வதம் செய்யும் வகையில் அம்பு போடுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்