விழுப்புரம்
விக்கிரவாண்டியில் நவராத்திரி உற்சவம்
|விக்கிரவாண்டியில் நவராத்திரி உற்சவம் நடைபெற்றது.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டியில் உள்ள ஸ்ரீதர்மஸ்தபவர்தினி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது. இதில் 10-ம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி இரவு ஸ்ரீதர்மஸ்தபவர்தினி சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு வடக்கு புறவழிச்சாலை மந்த கரையில் மகிஷா சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அம்பாள் மகிஷாசூரனை வதம் செய்து மகிஷாசுர வர்தினி யாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மகாதீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் விக்கிரவாண்டியில் புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி புவனேஸ்வரி அம்மன், புவனேஸ்வரர், விநாயகர், வள்ளி தெய்வானை முருகன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர், புவனேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை ரவி, வேதாத்திரி குருக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.