< Back
மாநில செய்திகள்
கூடல்அழகிய சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா
சிவகங்கை
மாநில செய்திகள்

கூடல்அழகிய சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா

தினத்தந்தி
|
26 Oct 2023 12:15 AM IST

கூடல்அழகிய சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது.

திருப்பத்தூர்,

கீழச்சிவல்பட்டியில் பழமை வாய்ந்த கூடல்அழகிய சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நவராத்திரி விழா கடந்த 15-ந் முதல் தொடங்கி 10 நாட்களாக நடைபெற்றது. சுவாமி தினந்தோறும் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். நேற்று முன்தினம் நவராத்திரி நிறைவு நாளையொட்டி சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி மாடுகள் பூட்டப்பட்ட ரதத்தில் கல்லுக்கட்டி ஊருணி பகுதிக்கு சென்றார். அங்கு சுவாமி வாழை மரத்தை சுற்றி வலம் வந்து அம்பு எய்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அங்கிருந்து சுவாமி அம்மன் சன்னதி, மு.அழ.வீதி, மந்தையம்மன் கோவில் வீதி வழியாக கோவில் வந்தடைந்தனர். ஏற்பாடுகளை கருப்பையா செட்டியார், இந்து சமய அறநிலையத்துறையின் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் வெள்ளையன் செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்