< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்
சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா
|22 Oct 2023 12:30 AM IST
பூம்புகார் அருகே சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது
திருவெண்காடு;
பூம்புகார் அருகே சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் காசிக்கு இணையான கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி நேற்று மாலை சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சாயாவனேஸ்வரருக்கு பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் துரை சிவாச்சாரியார் செய்திருந்தார்.