< Back
மாநில செய்திகள்
ராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி விழா
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி விழா

தினத்தந்தி
|
21 Oct 2023 12:15 AM IST

திருக்கோவிலூர் ராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது.

திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ. நகரில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சி பொன்முடி கலந்துகொண்டு கொலு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கொலு மண்டபத்தில் நடைபெற்ற பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியை அவர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் தேவிமுருகன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகியும், நகர தி.மு.க. செயலாளருமான ஆர்.கோபிகிருஷ்ணன் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்