< Back
மாநில செய்திகள்
அக்காத்தம்மன் கோவிலில் நவராத்திரி விழா
கடலூர்
மாநில செய்திகள்

அக்காத்தம்மன் கோவிலில் நவராத்திரி விழா

தினத்தந்தி
|
23 Oct 2023 12:15 AM IST

திருவதிகை அக்காத்தம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது.

பண்ருட்டி,

பண்ருட்டி அடுத்த திருவதிகையில் புகழ் பெற்ற அக்காத்தம்மன் என்கிற சூரசம்ஹார காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி திருவிழா சிறப்புடன் நடைபெற்று வருகிறது. தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, வெவ்வேறு வாகனங்களில் அக்காத்தம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 7-ம் நாளான நேற்று முன்தினம் சாம்பவிதேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம், முன்னாள் நகர சபை தலைவர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்