< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
அம்மனுக்கு அலங்காரம்
|28 Sept 2022 4:17 AM IST
நவராத்திரி விழாவையொட்டி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
நவராத்திரி விழாவின் 2-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உற்சவர் ரெங்கநாச்சியார் சவுரி கொண்டை, ரத்தன நெத்திச்சூடி, வைரத்தோடு, வைர அபயகஸ்தம், பவளமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து கொலு மண்டபத்தில் எழுந்தருளியதையும், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் பகவதி அலங்காரத்திலும், திருவானைக்காவல் கோவிலில் உற்சவர் அகிலாண்டேஸ்வரி ஏகாந்த அலங்காரத்திலும், தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் உற்சவர் துர்க்கை அம்மன் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.