< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
நவராத்திரி விழா
|17 Oct 2023 12:15 AM IST
கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலில் நவராத்திரி விழா நடந்தது.
கீழ்வேளூரில் அட்சயலிங்க சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி விழா நேற்றுமுன்தினம் தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி மலர் அலங்காரத்தில் சுந்தர குஜாம்பிகை அம்பாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் அம்பாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்படுகிறது. நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமியன்று கோவிலில் இருந்து பாலசுப்பிரமணியர் குதிரை வாகனத்தில் வீதியுலா புறப்பட்டு திருவாரூர் - நாகை மெயின் ரோட்டில் உள்ள பிள்ளை திருவாசல் விநாயகர் கோவில் அருகே அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பூமிநாதன், தக்கார் முருகன், ஆய்வாளர் கமலச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.