< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
நவராத்திரி 5-ம் நாள் விழா: விசாலாட்சி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம்
|20 Oct 2023 12:00 AM IST
நவராத்திரி 5-ம் நாள் விழாவையொட்டி விசாலாட்சி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் விஸ்வநாதர் கோவிலில் நவராத்திரி 5-ம் நாளான நேற்று விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விசாலாட்சி அம்மனுக்கு மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மங்கள ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து அபிராமி அந்தாதி உள்ளிட்ட பல்வேறு பதிகங்களை பாடி அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். மங்கள இசை ஆராதனையுடன் அம்மனுக்கு சோடச உபச்சாரங்கள் நடைபெற்றது. மகாதீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.